ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்

தனக்கு தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொலை அச்சுறுத்தல் காரணமாக எனது தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளேன், எனினும் நான் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். மேலும், எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.