கோட்டாபாய அடியாட்கள் முன்னணி உறுப்பினருடன் அடாவடித்தனம்!📷

கோட்டாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் சற்று நேரத்திற்கு முன் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவருகின்றனர்.
அப் பகுதியில் உள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது அதனை பார்த்திபன் எதிர்த்தன் காரணமாக அங்கு பெரும் வாய் தர்க்கம் ஏற்பட்டது.

யாரிடம் கேட்டு என் வீட்டு மதிலில் ஒட்டுகின்றீர்கள் என்று பார்த்திபன் கேட்டதற்கு கோட்டாபாயவின் ஆதரவவாளர்கள் யாரிடம் கேட்க வேண்டும் யாரிடம் கேட்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மிரட்டல் தொனியுடன் மிரட்டினர். அத்துடன் சுவரொட்டிகளையும் மிரட்டல் பாணியில் மீண்டும் ஒட்டுவதற்கு முயற்சித்தனர். இருந்த போதிலும் அதனை அனுமதிக்காதன் காரணமாக அது அங்கு பெரிய வாய்தர்க்கமாக உருவெடுக்க கோத்தபாயாவின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டமால் இவ்இடத்தை விட்டு நகர்ந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.