விழுந்த உயிர்..!!
விலைறதிப்பற்ற பொக்கிசமொன்று வீதியில் விழுந்துகிடக்கிறது
விடியலை எமக்களித்த விடிவெள்ளி யொன்று வலுவிழந்து கிடக்கிறது

தன்சுகம் மறந்த தரணியின் தாய்த்தெய்வம் தனியாய்க் கிடக்கிறது
தவித்தவாய்க்குத் தண்ணீர் தருவாரின்றி தாகத்துடன் கிடக்கிறது
மண்ணுலகம் போற்ற மக்களைப் பெற்ற மனிததெய்வம் மயங்கிக் கிடக்கிறது
மறுபடியு மொரேயொரு முறை
மகவைக் காணும் ஏக்கத்தில் மன்றாடிக் கிடக்கிறது..
அன்னையைப் போற்றும் அன்பு அகிலத்தில் அழிந்து கொண்டிருக்கிறது
அனாதையாய் அவளுயிர் பிரிவதை யெண்ணி அழுது கொண்டிருக்கிறது
மனிதகுலத்திற்கோர் செய்தி சொல்லி மரணித்துக் கொண்டிருக்கிறது
மதிகெட்ட மக்களைப் பெற்றவள் மனது மன்னித்துக் கிடக்கிறது
அன்ன ஆகாரம் உண்ணவழியின்றி உறங்கிக் கிடக்கிறது..
உதிரஞ்சிந்தி உருவாக்கிய பிள்ளைகள் உதறித்தள்ளியது..
மண்ணுக்கு உரமாய் மாறும் மனிதம் மரித்துக் கொண்டிருக்கிறது
மண்மாதாஅன்புடன் அவளைத் தன்னோடு அரவணைக்கின்றது..
எண்ணியே பாருங்கள் எம்மையீன்றவர் நிலைதனை ஒருகணமே...
என்றும் மனிதா உன்மனம் மாறாதா அன்பாகத் தினந்தினமே..?
தம்பலகமம் கவிதா.

கருத்துகள் இல்லை