சிவாஜிலிங்கம் நகைச்சுவையாளனா? நாயகனா?
ஜனாதிபதி
தேர்தலுக்காக சுயேட்சையாக களமிறங்க கட்டுப்பணத்தை கட்டியுள்ள முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே
சிவாஜிலிங்கம் ஐயாவை நகைச்சுவையாக பார்ப்போருக்கு.
1. அரசியல் பயணம்தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர், அதற்காக முன்னிற்பவர்.
2. சிங்களப் பேரினவாதம் பல தடைகளை ஏற்படுத்திய போதிலும் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்பட்ட போதிலும் அவர் தமிழர் அரசியலில் வினைத்திறனுடன் இயங்கி வருபவர்.
3. பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு அஞ்சி மாவீரர் தினங்களை நடாத்த அனைவரும் பயந்து நிற்கையில் முன்னின்று நடாத்திக் காட்டியவர்.
4. பல மாவீரர்களுக்கான , தியாகிகளுக்கான அஞ்சலிகளை இப்போதும் இந்த வயதிலும் ஓடி ஓடிச் சென்று நிகழ்த்திக் காட்டும் ஒருவர்.
5. காணி சுவீகரிப்பு மற்றும் இதர விடயங்களில் நேரடியாக தனது எதிர்ப்புகளை காட்டி பல வழக்குகளில் இப்போதும் ஆஜராகி கொண்டிருப்பவர்.
6. தமிழர்களுக்கான போராட்டங்களில் முன்னின்று கலந்து கொண்டு குரல் எழுப்புவது, தமிழர் தாயகத்துக்காக சர்வதேச அளவில் குரல் கொடுப்பதால்
பயங்கரவாத விசாரணை பிரிவுகளில்
அடிக்கடி அழைக்கப்படுபவர்.
7. தமிழர் தாயகப் பகுதியில் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்த நாள் தொடக்கம் இன்று வரை ஓயாமல் பல போராட்டங்களை முன்னெடுத்து தமிழ் தேசியத்தை மக்கள் மத்தியிலே நிலையில் எரிபற்று நிலையில் பேணிப் பாதுகாக்கும் ஒருவர்.
8. ஐ.நா அமர்வுகளில் ஒவ்வொரு வருடமும் பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று தமிழர்களுக்காக உரிமை குரல் கொடுப்பவர்.
அங்கு சிங்கள மேலாதிக்க வாதிகளுடன் நேரடியாக வாதத்தில் ஈடுபடுபவர்.
9. தீவகத்தில் பிரச்சாரத்தின் போது காலிலே வாள் வெட்டுக்கிலக்காகி உயிர் ஆபத்தை எதிர் கொண்ட போதும் மீண்டும் துணிச்சலாக தமிழ் அரசியல் தமிழர் உரிமை பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிற தமிழர்களின் வேணவாக்களை வெளிப்படுத்தி நிற்கின்றன ஒருவர்.
அதே ஏலாத காலோடு பல போராட்டங்களை ஓயாமல் நடாத்துபவர்.
10.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த போது பாராளுமன்ற குழுவிலும், தற்போது ஒருங்கிணைப்பு குழுவிலும் கூட்டமைப்பு தலைமையிடம் நிற்க வைத்து கேள்வி கேட்பவர்.
11.வடக்கு மாகாண சபையில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த போது அதை நடுநிலையாக நின்று சமரசம் செய்தவர்.
12.வடக்கு மாகாண முதலமைச்சருக்கெதிராக கொணரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணைக்கெதிராக முன்னின்று அவரது கதிரையை காப்பாற்றியவர்.
13.தேசிய தலைவர் அவர்களது தாயாரின் உடலை கூட காண பலர் பயப்பட்ட, இரங்கல் தெரிவிக்க தயங்கிய வேளையில்(இப்போது புலி வீரம் விளாசும் முண்ணணி யின் முன்னணணியினர் கூட)
அம்மையாரின் உடலை அவரது சொந்த ஊரில் தகனித்து காட்டியவர்.
இவ்வாறு பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்போது சொல்லுங்கள் ......
சிவாஜிலிங்கம் நகைச்சுவையாளனா?
நாயகனா?
அவர் சிறீ லங்காவின் சனாதிபதி பொது வேட்பாளராக களமிறங்கவல்ல தமிழர் தேசத்துக்கே முதலமைச்சராகும் தகுதி , தகமை உள்ளதா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை