சிவாஜிலிங்கம் கட்சி உறுப்பினர் விடுத்துள்ள ஒர் அன்புமடல்!!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறங்கியதை அடுத்து பல பொய்யான செய்திகளை இணைய ஊடகங்களும் சமூகவலைத்தளங்களிலும் சில குழப்பவாதிகள் வார்த்தைகளை கேட்டு தவறாக பதிவிடுகின்றனர்.



குறிப்பாக எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் ரெலோ கட்சியின் உறுப்பினர்களை தொடர்பு வைக்க வேண்டாம் என்று கட்சி தலைமை கூறியதாக ஒரு பொய்யான செய்தியும் எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சித்தலைவரை திட்டி தீர்த்ததாக இன்னுமொரு பொய்யான செய்தியும் உலாவுகின்றது.

இப்படியான எவ்விதமான சம்பவங்களும் நடைபெறவும் இல்லை எவ்விதமான அறிவிப்புக்களும்  விடுக்கப்படவும் இல்லை இவ்வாறான பொய்யான கதைகளை பரப்புபவர்கள் கட்சியின் நலன்களுக்கு எதிரானவர்களே ஒருவேளை அரசியலில் தங்கள் சுய நலங்களை அடைதற்காக இவ்வாறான கட்டுக்கதைகளை ஏற்படுத்துகின்றார்களோ என்ற சந்தேகம் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மேலேழுந்துள்ளது.

மேலும் இன்று பெருமளவாக தாயக மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் எம்.கே. சிவாஜிலிங்கம் எடுத்திருக்கும் முடிவு சரியானதே என்ற குரல்கள் தான் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

த.தவநேசன்
மத்தியகுழு உறுப்பினர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.