சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் மகேந்திரன் விவகாரம்!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்களை சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பமிட்டிருந்த குறித்த ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பதற்காக கடந்த மாதம் சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த ஆவணங்கள் தற்போது சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக அவர்கள் பரிசீலித்து வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.

இந்த வருடம் ஜூன் மாதம் மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பாக அதன் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக நிரந்தர உயர்நீதிமன்ற விசாரணைக்கு முன் சட்டமா அதிபர் இந்த குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்திருந்தார்.

பின்னர் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற விசாரணைகளின்போது நிரந்தர உயர்நீதிமன்ற இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்களை ஜூலை 19 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

இந்த விசாரணைகளுக்காக அர்ஜுன மகேந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகாதமையினால் அவரை கைது செய்ய நிரந்தர உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.