இந்தியாவில் அல்ல மலையகத்திலேயே எமது தலைவர்களை தேட வேண்டும்-பா.சிவநேசன்!!

எமது தலைவரை இந்தியாவில் தேடக்கூடாது. எமது தலைவரை மலையகத்திலேயே தேட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர பா.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி முக்கியஸ்தர்களின் ஒன்றுக்கூடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
மலையகத்தில் அடிப்படை மற்றும் உரிமை பிரச்சினைகள் குறித்து தீர்வு காணப்பட்டு வருகின்றன. இதற்கு யார் காரணம்?.
லயத்தில் பிறந்து துன்பங்களை அனுபவித்த நமது தலைவர் திகாம்பரம் அவர்களே காரணம்.
ஒரு தேயிலை செடி பிடிங்கினால் பட்சீட் கொடுத்த காலமே இருந்தது. அந்த காலம் மாறியுள்ளது. நமக்கு 7 பேர்ச் சொந்த நிலமும் சொந்த வீட்டையும் அமைச்சர் திகாம்பரம் பெற்றுக்கொடுத்துள்ளார்.
மலையக மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தெரியாத தாத்தா பூட்டா, அப்பா என சிலர் மலையக மக்களை அடகு வைத்து சம்பாதித் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் அதேவேளை, இன்று தமது அரசியல் வாரிசுகளுக்கு பதவி வழங்கபடுகின்றது. அவர்களுக்கு மலையக மண்ணின் வாசம் தெரியாது. அமெரிக்கா, லண்டன், இந்தியா மலேசியா போன்ற வாசங்களே அவர்களுக்கு தெரியும்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் அனைத்து முக்கியஸ்தர்களும் மலையகத்தில் தோட்டத்தில் பிறந்தவர்களாகும். அதன் காரணமாகத்தான் தலைவர் திகாம்பரம் தனது அபிவிருத்தி திட்டங்களை எமது மக்களின் தேவைக்கேற்ப நடைமுறை படுத்திவருகின்றார்.
பொங்கலுக்கு சுண்ணாம்பு, நீலம், பிரஸ் கொடுத்த காலம் போய் சொந்த வீட்டிற்கு சொந்த பணத்தில் டைல்ஸ் முடிக்கும் யுகத்தை உருவாக்கியுள்ளோம் என்றார்.
Powered by Blogger.