வட்டவளையில் நிலம் தாழிறக்கம்!!📷

அட்டன்– கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம்: ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (8) மதியம் முதல் பெய்த பலத்த மழை காரணமாக இந்த நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட இந்த தாழிறக்கம் காரணமாக ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்க கூடியதாக உள்ளது.
பள்ளமான பகுதியில் வீதி கீழிறங்கியுள்ளதால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.