கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதிக்கு காத்தான்குடி சம்மேளனம் கெளரவம்!📷

கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் கே.பீ.ஏ.ஜயசேகர அவர்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதிலும் அயராது உழைத்த மைக்காக அவரது சிறப்பான சேவையினை பாராட்டி கௌரவப்படுத்தும் வகையிலான நிகழ்வு திங்கட்கிழமை (7) காத்தான்குடி சம்மேளனத்தின் அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இக் கெளரவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளை தளபதி. மேஜர் ஜெனரல் கே.பீ.ஏ.ஜயசேகர மற்றும் குருக்கல்மடம் கட்டளை. தளபதி லப்டினல் ஜென்ரல் ஈ.யூ.டபிள்யூ, என்.சீ.எகலபொல ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷேய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி) மற்றும் பிரதேச கட்டளைj; தளபதி, கல்லடி கட்டளை தளபதி உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.