பொகவந்தலாவயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்த நோர்வூட் பிரதேச சபை!

பொகவந்தலாவ பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டியாகலை தோட்டத்தினூடாக பாயும் ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக ஆற்று நீர் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து பெரும் சேதத்தினை ஏற்றபடுத்தியதை அறிந்து அங்கு விஜயம் மேற்கொண்ட நோர்வூட் பிரதேச சபை தலைவர் குழந்தைவேலு பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினர்.
குழந்தைவேலு கருத்து வெளியிடுகையில் ,


இங்கு 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 83 பெண்களும் 21 குழந்தைகள் உட்பட 169 பேர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர் .

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்த அதே சமயம் அங்குள்ள நிலைமைகளை அவதானித்து உடனடியாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் அம்பகமுவ பிரதேச செயலாளருக்கும் நிலைமையை விளக்கி அவர்களின் அவரச உதவிகளை கோரினேன்.


மேலும் தொண்டு நிறுவனங்களான செஞ்சிலுவை சங்கம் ( world vision)தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் உடைகளுக்கான தேவைகளின் தகவல்களையும் தெரிவித்துள்ளேன்.மேலும் அப்பிரதேச மக்களிடம் கலந்தாலோசித்து அவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் ஏனைய அவசரகால நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் கலங்கிய வள்ளலாரை போல நீங்கள் துயர்படும் போது கை காட்டி செல்ல நான் அந்நியன் அல்ல உங்களில் ஒருவன் எந்த நேரமும் உங்களுக்காக நான் இருக்கிறேன் எனவும் மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.