கொரியாவில் விருது பெற்ற மலையக இளைஞன்!!

கொரிய தீபகற்பத்தில் தமிழ் மொழிக்காக ஆற்றிய சேவையை பாராட்டி அந்த நாட்டின் தமிழ்ச் சங்கம் இலங்கையர் ஒருவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

திறமையான தொழின்முறை மற்றும் சேவைக்கான விருதையே இலங்கையர் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொரியாவில் பணியாற்றும் ஜெயமணி மணிவன்னன் இந்த விருதை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார்.
இறக்குவானையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், சுமார் 10 வருடங்களுக்கு மேல் கொரியாவில் பணியாற்றி வருகின்றார்.
இறக்குவானை பரி.யோவான் கல்லூரின் பழைய மாணவன் என்பதுடன், அவர் தமிழ் மொழிக்காக கொரியாவில் தொடர்ச்சியாக பல சேவைகளை ஆற்றியுள்ளார்.
தமிழுக்காக பிறநாடொன்றில் மலையக இளைஞன் விருது பெற்றமை வரவேற்கத்தக்கது
Powered by Blogger.