புலிகளின் கடலோடியான கோடியாக்கரை சீத்தாராமன் ஐயா !!

புலிகளின் கடலோடியான கோடியாக்கரை சீத்தாராமன் ஐயா காலமாகியதையொட்டிய மீள் பதிவு இது.
ஐயாவிற்கு இரு தமிழர் நிலமும் தலை வணங்குகிறது...


கடற் புலிகள் வளர்ச்சியடைவதற்கு முன்பாக தமிழீழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் போராளிகளை ஏற்றி இறக்குதல் மற்றும் கடல் விநியோகங்களில் ஈடுபட்டவர்கள் ‘ஓட்டி’ என்றழைக்கப்பட்ட கடலோடிகள்.
இவர்கள் பேசும் போது
சங்கேத மொழியில் இயக்கத்தை ‘கம்பனி’ என்றும், தலைவரை ‘பண்ணையார்’ என்றும் விளிப்பார்கள்.
இது ஒரு கட்டத்தில் வட தமிழீழத்தின் கடலோர மக்களிடையேயும் புழக்கத்திற்கு வந்தது.
கவனியுங்கள், இரு சொல்லாடல்களும் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளவை.
அதுதான் இதன் சிறப்பு.
கண் முன்னே சமகால வரலாறே அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் கொண்டிருக்கும் இன அழிப்பு சூழலில் இதையெல்லாம் யார் நினைவு வைத்திருக்கப் போகிறார்கள்?
நேற்று நண்பர்கள் கூடிப் பேசிய போது மீட்டெடுத்த நினைவு இது.
இந்த ‘ஓட்டி’ களை கள ஆய்வு செய்து ஒரு நாவலோ, திரைப்படமோ வெளிவந்தால் அது முறையே உலகப் பேரிலக்கியமாகவும், உலக சினிமாவாகவும் இருக்கும்.
கூடவே எமது விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக அது இருக்கும்.
ஏனென்றால் இரு தமிழர் நிலங்களையும் இணைத்த கண்ணியாக ஓட்டிகள் இருந்தார்கள்.
ஒரு படைப்பூக்க மன நிலையில் நின்று பேசினால் இரு நிலங்களுக்கும் இடையிலான அந்த கால கட்ட பண்பாடு, அரசியல், வரலாறு என்பதே இந்த ஓட்டிகளிடமிருந்துதான் தொடங்குகின்றது.
இது தனுஸ்கோடியில் தொடங்கி நந்திக்கடல் வரை தொடரும் வரலாறு.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.