தாயகத்தில்"பாலச்சந்திரன் அறக்கட்டளை"அங்குரார்ப்பணம்!!📷

பேர்லின் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில் தாயகத்தில் எமது தேசக்குழந்தை பாலச்சந்திரனின் அகவை தினத்தை முன்னிட்டு "பாலச்சந்திரன் அறக்கட்டளை" ஆரம்பிக்கப்பட்டது.

ஈழத்து இளவரசன் பாலச்சந்திரனின் 23 வது அகவை தினத்தை(01/10/2019) முன்னிட்டு மட்டு /கரடியனாறு, கோப்பாவெளி கிராமத்திலும்
அத்தோடு கிளிநொச்சியில் கருணா நிலையத்திலும் சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கி அகவை தினம் கொண்டாடப்பட்டது.
இன்நிகழ்வானது பேர்லின் அம்மா உணவகத்தின் ஏற்பாட்டில் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட "பாலச்சந்திரன் அறக்கட்டளை" யின் அனுசரணையில் நடைபெற்றதோடு அப்பிரதேச வாழ் மக்கள் கடந்த காலத்தில் எதிர்நோக்கி வந்த தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொருட்டு தண்ணீரை இலகுவாக அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு பெற்றுகொள்வதற்கு ரூ.100,000.00 பெறுமதியான காசோலை அவ்வூர் தலைவரிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் அவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு மேலதிகமாக 150,000.00 வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.


உயரிய நோக்கோடு தாயகத்தில் உருவாக்கப்பட்ட "பாலச்சந்திரன் அறக்கட்டளை" யின் ஊடாக தாயக மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள அனைத்து புலம்பெயர் வாழ் உறவுகளையும் அன்போடு வேண்டிநிற்கின்றோம்.

பேர்லின் அம்மா உணவகம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.