பிகில்: பெண்களுக்கு சமர்ப்பணம்!
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிகில், மாதரை போற்றும் மகத்தான கொண்டாட்டமாக ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கவுள்ளது.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் சார்பில் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு படைக்கவுள்ள படம் பிகில்.
ஒரு மெகா பட்ஜெட் படத்தயாரிப்பு நிறுவனம், தன்னுடைய வெற்றிகரமான பயணத்தில் மிக முக்கியமான படமாக வெளியாகும் பிகில் படத்திற்கு எத்தனையே வழிகளில் புரொமோஷனை மேற்கொள்ளும் சாத்தியங்கள் இருந்தாலும், நிதானமாக அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு, மிக அழகாக சமூக வலைதளங்களில் அப்பொறுப்பை ஏற்க ஏஜிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சனா கல்பாத்தியிடம் கொடுத்தது.
‘சிங்கப் பெண்களின்’ சினிமாவை துவக்கத்திலிருந்தே அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளங்களின் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவரும் விதத்தில் சென்றடைய வைத்தார். ரசிகர்களின் நாடித் துடிப்பை நன்கறிந்த இளம் இயக்குநர் அட்லீ, பிகில் படத்தின் மூலம் ‘வேற லெவல்’ கொண்டாட்டத்தை திரையில் கொடுக்கவிருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய படங்களில் பெண்களை கண்ணியமாக காட்சிப்படுத்தி வரும் அட்லீ, இப்படத்தில் இன்னும் உச்சமாக பெண்களுக்கான அரியணையை திரைக்களத்தில் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
விஜய் தன்னுடைய திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் பாக்ஸ் ஆபீஸ் முக்கியத்துவத்தையும் கடந்து சமூக ரீதியிலான அக்கறைகளுக்கும் விழிப்புணர்வுகளுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருபவர். பிகில் படத்தில் ராயப்பன், மைக்கேல், பிகில் என அவதாரம் எடுக்கும் விஜய், இம்முறை கால்பந்தை கையில் எடுத்திருக்கிறார்.
கூடவே, வீராங்கனைகளுக்கு கால்பந்து பயிற்சி அளிப்பவராகவும்...ரசிகைகள் மனதில் சகோதரனாக குடியிருக்கும் விஜய், பிகில் படத்துக்குப் பின் எப்போதும் உத்வேகம் அளிக்கும் ‘கோச்’ஆகவும் மாறுவார் என ஆருடம் கூறுமளவுக்கு வந்திருக்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர். ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், கதிர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இசை: ஏ.ஆர். ரஹ்மான்,
ஒளிப்பதிவு: ஜி.கே.விஷ்ணு,
படத்jதொகுப்பு: ரூபன்.

கருத்துகள் இல்லை