மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வுகளை யார் ஜனாதிபதியானாலும் வழங்கமாட்டார்கள்-சார்ள்ஸ்!!
யார் ஜனாதிபதியானாலும் எங்களுடைய மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வுகளை வழங்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இன்று வவுனியா முருகனூரில் மக்களின் குறை நிறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அக் கலந்துரையாடலின் பின்னர் கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியின் நிலைப்பாடு அல்ல, அதற்கு நான் பதில் கூற முடியாது. என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாக நான் இதனை கூறிக் கொள்கின்றேன்.
எந்த ஜனாதிபதி வந்தாலும் எங்களுடைய மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை தர மாட்டார்கள் என்பதே என்னுடைய நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டை கொண்டு வரும் பொழுது தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்கள் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்
வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து ஒரு செயற்பாட்டினை நாங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.
இவ்வளவு காலமும் வராதவர்கள் அரசியல் காரணத்துக்காக எங்களுக்கு வாக்கினை போடுங்கள், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த விடயங்களை கூறி நாங்கள் செய்து தருவதாக வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை கேட்டு பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரு நிலைப்பாட்டில் ஆரவாரமில்லாமல் முடிவெடுக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை இன்னுமொரு முடிவும் எடுக்கவில்லை. இருந்தாலும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடைய வேண்டுதலுக்காக ஒற்றுமையாக முடிவெடுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டிருந்தார்கள். ஒற்றுமையாக முடிவெடுப்பதற்கு எமது கட்சியும் உடன்பட்டிருக்கின்றது. இது தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கவில்லை அதன் பின்னர் மக்களுக்காக தொடர்பான விழிப்புணர்வுகள் அளிக்கப்படும்.
ஜனாதிபதியாக வரக்கூடாதென்ற நிலைப்பாட்டிலும் பலர் இருக்கிறார்கள் மக்கள் மத்தியில் உள்ள கருத்துக்களையும் வைத்து ஓர் இறுதியான முடிவு எடுக்கப்படும். நாங்கள் அவசரப்பட வேண்டிய தேவையில்லை. இந்த விடயம் தொடர்பாக பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை என்பது தான் என்னுடைய கருத்து.
நாங்கள் வாக்களிக்க வேண்டும் எல்லோரும் ஒற்றுமையாக நாங்கள் வாக்களிப்போம். வேட்பாளர் வெல்லுவார் தோற்பார் என்பதற்கு அப்பால் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் ஒரு நிலைப்பாட்டில் இருந்தார்கள். அவர்கள் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இந்த நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பதில் நாங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
குறிப்பாக எமது கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய கொள்கை ரீதியான தமிழ் மக்களுடைய நலன் சார்ந்த முடிவுகளை தான் நாங்கள் எடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனபடியால் நாங்கள் எவ்விதமான சலுகைகளையும் பெற்று செய்வதாக இருந்தால் நாங்கள் இவ்வளவு பொறுமை எமக்குத் தேவையில்லை. இப்போதே நாங்கள் யார் வேட்பாளர் என கூறிவிட்டு நாங்கள் அதற்குரிய வகையில் செயற்பட்டு இருக்கலாம்.
நாங்கள் கூறும் விடயங்களை மக்கள் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. இதுதான் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தற்போது இருக்கும் நமது நிலைப்பாடு என மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை