பேசத்தயாராகும் தரப்புக்களுடன் பேச்சு - சித்தார்த்தன்!
தமிழர் தரப்பிலுள்ள ஐந்து கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள பொது இணக்கப்பாட்டுக் கோரிக்கையை முன்வைத்து பேசத் தயாராகவுள்ள தரப்புக்களுடன் தொடர்ந்தும் பேசி நாங்கள் ஒரு முடிவிற்கு வர முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்பதற்கமைய தமிழர் தரப்பிலுள்ள ஐந்து கட்சிகள் இணைந்து பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் சில கோரிக்கைகளை முன்வைத்து தயாரித்துள்ள பொது ஆவணத்தின் அடிப்படையில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுடன் பேசப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தமிழ்க் கட்சிகளின் இந்த ஆவணம் குறித்து தெற்கில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டு; இந்த ஆவணத்தை ஏற்கப் போவதில்லை என கூறியும் இதனை நிராகரிப்பதாகவும்; வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஆனாலும் இந்த பொது ஆவணத்தை ஏற்காவிட்டாலும் இவை தொடர்பில் கட்சிகளுடன் பேசுவதற்குத் தயார் என்றும் அறிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் இது குறித்து சித்தார்த்தனிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-
ஐனாதிபதித் தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து பொது ஆவணத்தை தயாரித்துள்ளன. அந்த ஆவணத்தை ஏற்கப் போதில்லை என்று கூறுகின்றனர். அதே நேரம் பேசுவதற்கும் தயார் என்றும் கூறுகின்றனர். ஆகையினால் பேசுவதற்குத் தயாரான தரப்புக்களுடன் பேச்சுக்களை நாம் முன்னெடுப்போம்.
அவ்வாறு பேசுகின்ற போது நாம் தயாரித்துள்ள ஆவணத்தின் பிரகாரம் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வரலாம். ஏனெனில் இந்த விடயங்கள் சம்மந்தமாக ஐனாதிபதியே நடவடிக்கை எடுக்க முடியும்.
அதே நேரம் அரசியல் தீர்வு விவகாரம்தான் பிரச்சனையாக இருக்கிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு, உடனடியாக நடைபெறுமோ அல்லது நடாத்தப்பட வேண்டுமென்றோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அதனை ஐனாதிபதி செய்ய முடியாது. அது பாராளுமன்றத்திலேயே செய்யப்பட வேண்டியது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிரதான இரு வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் அல்ல. உண்மையில் அவர்கள் கட்சித் தலைவர்களாக இருந்தாலாவது கட்சி நிலைப்பாடுகள் தொடர்பில் உத்தரவாதத்தை பெற முடியும். ஆகவே அரசயிலமைப்பு மாற்றம் என்பது இந்த பாராளுமன்றத்தில் நடக்கப்போவதில்லை. அது அடுத்த பாராளுமன்றத்திலே நடக்க கூடியது.
ஆகையினால் அதற்கான கோரிக்கையை நாங்கள் முன்வைக்கலாம். ஆனாலும் நாங்கள் இப்பபோது செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு இவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதன் அடிப்படையிலையே எங்களது முடிவுகளும் அமையும்.
எனவே கட்சிகளின் வேட்பாளர்கள் எப்படியிருந்தாலும் பேசலாம் என்று சொல்பவர்களுடன் பேசுவோம். அதே நேரம் அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களுடனும் பேசுவோம். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் சஐித் பிரேமதாச பேசத் தயார் என்று கூறியிருக்கின்றார். அதே போல கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பேசத் தயார் என்று கூறியுள்ளார். மேலும் தீர்வு என்பது நீண்ட கால விசயம். அதை அடுத்த பாராளுமன்றம் வருகின்ற போது தான் அது குறித்து சரியான முறையில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
ஏனெனில் ஐனாதிபதியால் செய்ய முடியாது. இருவரும் கட்சி தலைவர்கள் அல்ல. ஆகவே இவர்களுக்கு தங்கள் கட்சியை கட்டுப்படுத்தும் தன்மை இவர்களிடம் இருக்காது.
ஆகவே முதலில் செய்யக் கூடிய அல்லது செய்ய வேண்டிய நாங்கள் சொன்ன இந்த விசயங்களைச் செய்வதாக ஒப்புக் கொள்வார்களாக இருப்பதுடன் அடுத்ததாக அரசியல் தீர்வு நடவடிக்கைக்கு போவார்களாக இருந்தால் எமது கோரிக்கைகளை அவர்கள்; முன் வைத்து நாங்கள் ஐந்து கட்சிகளும் இணைந்ததாக ஒரு முடிவை காண முடியுமென நினைக்கிறேன் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை