கோட்டாபய சிங்கப்பூர் பயணமானார்!


வைத்திய பரிசோதனைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(10) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இன்று அதிகாலை 12.50 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ 468 எனும் விமானம் ஊடாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு பயணமாகியுள்ளனர்.

அவர் இம்மாதம் 12ம் திகதி மீளவும் நாடு திரும்ப உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.