சிறையில் உள்ள இராணுவத்தினரை உடன் விடுதலை செய்வேன்–கோட்டா!


ஜனாதிபதியானதும் முதல் வேலையாக சிறையில் அடைக்கப்பட்ட இராணுவத்தினரை உடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(09.10.2019) அநுராதபுரம் – சல்காது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், விவசாயிகளுக்கு நிவாரணமாக இலவசமாக உரம் வழங்கப்படும். அனைத்து விவசாயக் கடன்களும் இரத்துச் செய்யப்படும் எனவும், நாட்டை தன்னிறைவடைய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
Powered by Blogger.