வடமராட்சி மண்ணில் கூத்தடிக்கும் சினிமா விஜய் பதாகை கொண்டாட்டம்!!📷

யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் இளம் சமுகம் இன்றய காலகட்டத்தில் சீர் கெட்டு செல்கின்றது.

இந் நிலையில் இவர்கள் முன்னெடுக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் விஜயின் பிகில் படத்திற்கு பாரிய விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. வடமராச்சி பிரதேசசபை குப்பை வாகனத்தின் கொண்டு வந்து இவ் விளம்பரம்  அகற்றப்பட்டுள்ளது.

 நெல்லியடி பேருந்து நிலையத்தின் முன்பாக விஜய் பிகில் பதாகை வைக்கப்பட்டதை மூத்த சமூக ஆர்வலர்கள் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களுக்கு சுட்டிக்காட்டினார்கள்.

இவ்வேளைஅடுத்து சினிமா நடிகருக்கு வைக்கப்பட பதாகை  அகற்றப்பட்டுள்ளது. இம் மண்ணில் முதல் கரும்புலியை எம் தமிழ் தேசத்துக்காக  தந்த,தேசிய தலைவனை தந்த வடமராட்சி மண்ணில் இக் காலத்தில் இளம் சமூகம் கூத்தாடிக்கும் வேளைகள் கவலை அளிக்கின்றது.


இவ்வாறான சினிமா பதாகைகள் கொண்டாட்டம் இடம் மண்ணில் வேண்டாம் என குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.