இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு ஓர் அன்புமடல்!!

தாங்கள் சந்தித்தது அவரது அழைப்பின் காரணமாக இருக்கலாம் அல்லது பெற்றுக்கொண்ட புத்தர்சிலை பெயரளவில் சாதாரணமான விடயமாக உங்களுக்கு இருக்கலாம். ஆனால் சுரேன் ராகவனுக்கு அதுவே சிங்களப் பேரினவாத அரசின் அதிகார அடையாளம், தமிழர்களது இறைமையின் மீதான அதிகாரத் திணிப்பாகவே தங்களை இங்கே அடையாளப்படுத்துகிறார் இராகவன்.
ராகவன் சிங்களத்தில் சிந்திக்கும் மனிதர். சிந்திக்கும் மொழியே தாய்மொழி என்பதற்கமைய அவர் ஓர் சிங்களர், தேரவாத பௌத்தத்தின் அடிப்படைவாதச் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்ட காவியணியாத் தேரர் அவர், தமிழர்மண்ணைக் கபளீகரம் செய்யும் இலங்கை தொல்லியற் துறையின் கையாள். பிரித்தானியாவில் அவர் கற்ற பல்கலைக்கழகத்தில் பௌத்த பீடத்தை அமைத்தவர் எனச் சிங்களத் துதிபாடிகளால் போற்றப்படும் தேரவாத பௌத்த முன்னோடியே ராகவன்.
தமிழீழ மண் இன்றுள்ள நிலையில், நமது மண்ணிலுள்ள இளைஞர்கள் கொஞ்சம்கொஞ்சமாக மீளெழுந்து மேற்கொள்ளும் போராட்டங்களைச் சிதைக்கும் விதமாக உங்கள் நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது. தமிழீழ மண்ணிற்குச் செல்லமுன் , சற்றே விபரங்களைத் திரட்டி இன்றுள்ள நிலையினை ஆராய்ந்து, யாரை எப்போது எங்ஙனம் சந்திக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்று ஆராய்ந்தறிந்தபின் உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
அல்லது;
இங்கே ராகவனைச் சந்தித்துவிட்டு, தமிழ்நாடு சென்றதும் தமிழீழ விடுதளை பற்றிப் பேசும் உங்கள் திரைக்கதைப் போக்கையாவது நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் எங்களிடம் மீதமிருக்கும் சொத்து, தேசியத்தலைவர் விட்டுச்சென்ற அடிபணியாப் போராட்ட வரலாறுகள் மட்டுமே..!
-தேவன்-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை