முருங்கன் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார் வடக்கு ஆளுநர்!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் பொலிஸ் நிலையம் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தற்காலிகமாக இயங்கி வந்த முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தர கட்டடமானது 5 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) வைபவ ரீதியாக திறந்து அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன, வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுர அபய விக்ரம மற்றும் மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க உட்பட மன்னார் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பொலிஸ் நிலைய திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை