போராளிகளின் வாழ்வாதாரம் / “புனர்வாழ்வு” முகாம்கள், இராணுவப்பண்ணைகள் குறித்து செல்வராஜா கஜேந்திரன்!!
போராளிகளின் வாழ்வாதாரம் / “புனர்வாழ்வு” முகாம்கள், இராணுவப்பண்ணைகள் குறித்து பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு(2018) தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் திரு செல்வராஜா கஜேந்திரன் SKajendrenஅளித்த பதில்:-
போராளிகள் தொடர்பாக புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும் என முடிவு எடுக்கப்பபட்ட பின்னர் அவர்களாஇ ஒரு சிவில் கட்டமைப்பினிடம் ஒப்படடைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் 30 வருடங்கள் தமிழர்களின் தேசவிடுதலைக்காக தம்மை அர்ப்பணித்து போராடி ஒரு தேசத்தை கட்டியமைத்த அந்த தியாகிகள், இராணுவக்கட்டமைப்பின் கீழ் புனர்வாழ்வு எனும் பெயரில் அடிமைகளாகவே நடாத்தப்பட்டனர்.
அங்கு சித்திரவதைகளும் அவமதிப்புகளுமே நடைபெற்றவை இராணுவத்தால் நடாத்தப்படும் பண்ணைகளில் ஆடு மாடு கோழி வளர்க்கும்வேலைகளை செய்யுமாறு வற்புறுத்த்ப்பட்டு , பாதுகாப்பு அமைச்சின் கீழ் இராணுவக்கட்டமைப்பின் கீழ் கொடுப்பனவுகளை கொடுத்து வந்தன்ர்.
சுயதொழில் ஒன்றை உருவாக்கி, அந்த தொழிலை அடிப்படையாக வைத்து அவர்கள் சுயமாக வாழ்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. போராளிகளின் புனர்வாழ்விற்கென உலக நாடுகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபா பணத்தை சிறிலங்கா அரசு பெற்றுவருகின்றது.
ஆனால் அந்த பணத்தை பாதுகாப்பு அமைச்சு பெற்று, தமது கட்டமைப்பு ஊடாக தமக்காகவும் தமது பண்ணைகளில் வேலை செய்வதற்க்கான கூலியாகவும் பயன்படுத்துகின்றனரே தவிர போராளிகளின் உண்மையான வாழ்வாதார கட்டியெழுப்புதல்களுக்கு எதுவித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.
புனர்வாழ்வுத்தடுப்புமுகாம்களில் இருந்து அவர்கள் விடுதலை பெற்று வெளியில் வந்த பின்னர் கூட , உறவுகளுடன் பேசி பழகினால், புதிதாய் ஒரு தொழில் முயற்சியை கட்டியெழுப்பினால் , இன்னொருவர்/ உறவினர் நண்பர்கள் அவர்களுக்கு உதவி அவர்கள் சொந்த காலில் நிற்க முயன்றால் , “ நீ புலிகளை மீள கட்டியெழுப்ப முற்படுக்ன்றாய் “என போராளிக்ள் மேலும் அவர்களோடு பழகுவார்கள் தொழில் வழங்குபவர்கள் மீதும் கடுமையன இராணுவ அச்சுறுத்தல் பிரயோகிக்கப்படுகிறது.
அவர்கள் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றர். விசாரணைக்கு அங்கு வா இங்கு வா என அலைக்கழித்து அச்சுறுத்தலுக்குட்படுத்தப்படுவதோடு உளரீதியாக களைப்படைய வைக்கப்ப்டுகின்றனர்.
இதனால் போராளிகளை கண்டு கொள்ளாதுவிடுகின்ற துரதிர்ஷ்ட நிலைக்கு அவர்கள் தள்ளப்ப்ட்டு, போராளிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அதன் பின்னர், தமது இராணுவப்பண்ணைகளில் வேலை செய்தால் பாதுகாப்பும் வாழ்வதற்கு பணமும் கிடைக்கும் எனும் நிலையை உருவாக்குகின்றனர். திட்டமிட்ட ரீதியில் இது மேற்கொள்ளப்ப்டுகின்றது. அண்மையில் கூட போராளிகளின் வாழ்வாதார கட்டியெழுப்புதல் எனும் பெயரில் கொண்டுவரப்ப்ட்ட அமைச்சரவை பத்திரத்தை, சிறிலங்கா ஜனாதிபதியே நிராகரித்துள்ளார்.
அந்த வாழ்வாதார உதவியைகூட , பயங்கரவாதத்திற்கு உதவி செய்யும் நடவடிக்கை என பெயர் சூட்டி, சிறிதளவும் மனிதாபிமானம் அற்று நிராகரித்து உள்ளார். அண்மையில் கூட போராளிகளுக்கு இந்த அடிப்ப்டை நிலவரத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எது எப்படியெனினும் எம் தேசத்தை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த இந்த போராளிகளுக்கு கைகொடுப்பது என்பது எம் அனைவரினதும் கடமை என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மையில் எமது புலம்பெயர்மக்கள் மற்றும் தாயக மக்களின் உதவியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தன்னாலியன்ற அளவு இந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இது இன்னமும் விரிவாக்கப்பட்டு பரவலாலக்கப்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.
முன்னாள் போராளிகளின் வாழ்க்கை, புனர்வாழ்வு முகாம்கள், இராணுவப்பண்ணைகள், அண்மைய விசுவமடு சம்பவம் குறித்து , கடந்த வாரம் மட்டக்களப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி செயலாளர் திரு செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் அளித்த பதில்

.jpeg
)

கருத்துகள் இல்லை