அமைச்சர் றிஷாட்டின் கரங்களை பலப்படுத்தி தொடர்ந்தும் பயணிப்பேன்-சிராஸ்!
அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக பரப்பப்படும் செய்திகள் அப்பட்டமான பொய் எனவும் அரசியலில் இருந்து தன்னை ஓரங்கட்டுவதற்காக சதிகாரர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த புனைகதைகளை நம்பவேண்டாம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும் முன்னாள் மேயருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கரங்களை பலப்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை நல்குவேன் எனவும் அவர் உறுதியளித்தார்.
அண்மைக்காலமாக வேண்டுமென்றே தன்னைப்பற்றி பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தான் கட்சி தாவப்போவதாகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமக்கு வேதனை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
"கட்சியின் உயர்பீடத்தில் நான் ஒரு அங்கத்தவன் . கட்சி நடவடிக்கையில் தலைவருடன் இணைந்து பணியாற்றிவருபவன்.எனவே வீணாக என்னைப்பற்றி விமர்சித்து உங்கள் நேரகாலத்தை நாசமாக்காதீர்கள் நான் இந்த கட்சியிலேயே தொடர்ந்தும் பயணிப்பேன்.
அதுமாத்திரமின்றி கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் கட்சி தலைவர் மீது அபாண்டமான பழிசுமத்தப்பட்டபோது அது பொய்யானது என நிரூபிப்பதில் தலைவருக்கு பக்கபலமாக இருந்தேன் இவ்வாறு சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை