போக்குவரத்து விதி மீறல் தண்டனைச்சீட்டை மும்மொழிகளிலும்!!
வீதி பயணத்தின் போது விதி மீறல்களுக்காக வழங்கப்படும் தண்டனைச் சீட்டை இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில், குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச் சீட்டு வழங்கப்பட்டது.
ஆனால் அந்த தண்டனைச் சீட்டில் தண்டனைகள் என்ன என்பது தொடர்பாக சிங்கள மொழியில் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தன.
வடக்கு மகாண ஆளுநரிடம், தமக்கு தெளிவின்மை காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைத்து தமிழில் அவை வழங்கப்பட வேண்டும் எனவும் மக்களின் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடி முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், மூன்று மொழிகளிலும் தண்டனைச் சீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை