யார் இந்த சிவாஜி லிங்கம்...!!

-நதியை சுதர்சன்-
துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கும் போதும் சப்பாத்துக் கால்களால் இராணுவம் வாழைக்
குற்றியை உதைந்து வீழ்த்திய போதும் மீண்டும் மீண்டும் ராணுவ முகாம் வாசலில் "போடாங் கொய்யா" என்று

மாவீரர் சுடர் ஏற்றி வைக்கும் "தில்" இங்கு வேறு யாருக்கும் அப்போது இருக்கவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர், வல்வெட்டித் துறை முன்னாள் நகர சபை தலைவர்

ஆனால் தினசரி அரச பஸ் வண்டி யில் சாதாரண மக்களுடன் அரச இராணுவ புலனாய்வுத் துறை தொடர அச்சம் இன்றிய அச்சுறுத்தல் மிக்க பயணம்

இங்கு வேறு யாருக்கும் கிடையாது

ஈழத் தமிழர்களில் தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளில் மிக "தில்" நிறைந்த அரசியல் வாதி அண்ணன் சிவாஜி லிங்கம் மட்டும் தான்.

தலைவர் பெற்றோரை இராணுவத் தடுப்பில் இருந்து போராடி வாதாடி மீட்டு அவர்களுக்குச் சிகிச்சைக்காக இந்தியா கொண்டு செல்ல இந்திய அரசின் அனுமதி கோரி இந்திய மத்திய அரசுடன்,தமிழ் நாட்டு  அரசுடன்
மல்லுக்கு நின்ற மாமனிதர் சிவாஜி லிங்கம்.

இறுதியில் அவர்கள் மறைந்த போது உரிய மரியாதை செய்து இறுதிக்கடன் செய்த புனிதர் சிவாஜி லிங்கம்.

எல்லோரும் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு இருந்த இருண்ட காலம் அது.

மகிந்தவை எதிர்த்து சிங்கள குகையில்  குருணாகல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட
தமிழ்ச்சிங்கம்.

மக்கள் போராட்டம் என்றால் மாவீரர் நினைவேந்தல் என்றால்..

முதல் வரிசையில் முதலாவது நபராக மக்களுடன் மக்களாக நின்று ...

முட்டியை மடக்கி எதிரிகளை பதறவைக்கும் சிங்கம் சிவாஜி லிங்கம்.

அண்ணன் அரச தலைவர் தேர்தலில் களம் புகுந்து நிற்கிறார் என்றால் அதில் தமிழ் மக்கள் நலன் தவிர தன்னலன் இருந்திட முடியாது.

அண்ணன் கையை பலப்படுத்துவோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.