கனடா மொன்றியல் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மொன்றியல் - பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திற்கு பல தடைவைகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமை தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எண்டர்பியில் வைத்து இந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்.சி.எம்.பி. பொலிஸார் வெள்ளிக்கிழமை வெளியட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் அதிகாரிகளின் தகவலை அடுத்து இந்த மிரட்டல் குறித்த விசாரணையை தாம் ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலையத்துக்கு மிரட்டல் விடுத்தமை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை கைதான சிறுவன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.