வென்ற பிரதமர் ட்ரூடோ பெரும்பான்மை இழப்பு!!

கனடா பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ குறுகிய வாக்கு வித்தியாசத்தில் பதவியை தக்கவைத்துக்கொண்டபோதும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார்.


இந்தத் தேர்தலில் லிபரல்கள் 157 ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்க்கும் நிலையில் பொரும்பான்மைக்கு 13 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ட்ரூடோ தனது இரண்டாவது தவணையில் சட்டவாக்க செயற்பாடுகளை மேற்கொள்வதில் நெருக்கடிக்கு முகம்கொடுப்பார்.

எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களுக்கு கணிசமான ஆதரவு கிடைத்தபோதும் போதிய ஆசனங்களை வெல்ல முடியாமல்போயுள்ளது. அவர்கள் 121 ஆசனங்களை வெல்லும் என ஆரம்பக் கட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் 95 இடங்களையே பெற்றிருந்தனர்.

அதேபோன்று கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி புதிய ஜனநாயக கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும் அதன் தலைவர் ஜக்மீத் சிங் அரசை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.

338 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் புதிய ஜனநாயக கட்சி 24 ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியுபக்கின் பிரிவினைவாதக் கட்சி அந்த மாகாணத்தில் மாத்திரமே போட்டியிட்டு அதிக ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015 இல் 10 இடங்களை வென்ற அந்தக் கட்சி இம்முறை 32 ஆசனங்களை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1972ஆம் ஆண்டு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இப்போதைய தேர்தல், அப்போதைய வெற்றியை ஒப்பிட்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதை ஆரம்ப முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மொண்ட்ரிலில் வெற்றியை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலில் அடைந்த வெற்றி குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கனடா மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் மொண்ட்ரில் நகரில் பேசும்போது, “நீங்கள் செய்து வீட்டீர்கள் நண்பர்களே. வாழ்த்துகள். நாட்டை சரியான திசையில் நகர்த்துவதற்கு எங்கள் மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றி” என தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்றார். இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல விமர்சனங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது எழுப்பப்பட்டும் இரண்டாவது முறையாக கனடா பிரதமராகும் வாய்ப்பு ஜஸ்டினுக்குக் கிடைத்துள்ளது.

கனடாவில் சிறுபான்மை அரசுகள் வழங்கமானதாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மூன்று சிறுபான்மை அரசுகள் ஆட்சியில் இருந்துள்ளன. எனினும் கூட்டணி அரசு அங்கு மிக அரிதானதாகும்.

2008 ஆம் ஆண்டு லிபரம் மற்றும் புதிய ஜனநாயக கட்சி கூட்டணிக்கு முயன்றபோதும் அப்போதைய கன்சர்வேடிவ் பிரதமர் ஸ்டீவ் ஹார்பர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் லிபரல் மற்றும் புதிய ஜனநாயக கட்சியினர் மீண்டும் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டணி அமையாதபோதும் ஆட்சியை தொடர்வதற்கு ட்ரூடோ ஏனைய கட்சிகளுடன் இணக்கப்பட்டுக்கு வருவது அவசியமாக உள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.