முட்டையில்லாத பழ கேக்- ரிச் கேக் - Rich fruit cake!

சைவ சமய முறைப்படி செய்யப்படும் திருமண நிகழ்வுகளில் Rich fruit cake வழங்கப்படுவது தற்போது வழக்கத்தில் வந்துள்ளது. . வழக்கமாக இந்த கேக்கின் மேல் பாதாம் பருப்பு - Almond அல்லது கஜூ தூள் பாவித்து ஒரு ஐசிங் படை பரவித்தான் துண்டுகளாக வெட்டி பரிமாறுவார்கள். ஆனால் நான் அந்த ஐசிங் சேர்க்காமல்தான் செய்வேன். அந்த ஐசிங் மேலே போட்டுவைத்தால் நாட்கள் செல்லச் செல்ல ஐசிங் காயும் பொழுது கேக்கில் உள்ள ஈரலிப்புத்தன்மையும் இல்லாமல் போய் கேக் மிக வறண்டதாக சுவை குறைந்து காணப்படும். அத்துடன் இனிப்பும் மிக அதிகமாக இருக்கும்.


தேவையான பொருட்கள்:
500 கிராம் உலர்ந்த திராட்சை - (250 Raisins or Sultanas - 250 currants)

200கிராம் பட்டர் அல்லது மாஐரீன்

11/4 ரின் அல்லது 375 மில்லி ரின் பால்


250கிராம் பிறவுண் சீனி


250கிராம் ரவை அல்லது (150கிராம் ரவை + 100கிராம் கோதுமை மா)


100 கிராம் கன்டிற் பீல்- சீனிப் பாணியில் பதப்படுத்தப்பட்ட தோடம்பழம் 

அல்லது எலுமிச்சை தோல்

100 பதப்படுத்தப்பட்ட செர்ரி பழங்கள்


100 கிராம் பதப்படுத்தப்பட்ட பழக்கலவை - candied mixed fruits (அல்லது செர்ரி பழங்கள்)


250 கிராம் கஜூ - முந்திரிப் பருப்பு


200 கிராம் பதப்படுத்திய இஞ்சி


2 மேக தேன்


4 மேசைக்கரண்டி Strawberry Jam


125 மில்லி பிறண்டி அல்லது வைன்


1 தேகரண்டி கறுவா, 1தேக ஏலம், 1தேக கராம்பு, 1 தேக சாதிக்காய் தூள்கள்


2 மேக வனிலா எசன்ஸ்


2 மேக ஆமண்ட் எசன்ஸ்


1 மேக பேக்கிங் பவுடர்


ஆமண்ட் பேஸ்ட் Almond Paste- Marzipan செய்ய தேவையான பொருட்கள்:

200gr ஆமண்ட் தூள் அல்லது கஜூ தூள்

100gr ஐசிங் சீனி

100gr வெள்ளைச்சீனி

1 தேக எலுமிச்சைச் சாறு

1/2 தேக ஆமண்ட் எசன்ஸ்

120gr குளுக்கோஸ் சிரப் - Glucose syrup (பொதுவாக 1-2 முட்டையின் மஞ்சள் கருதான் பாவித்து செய்யப்படும்)

செய்முறை:

பழங்கள், கஜூ எல்லாவற்றையும் சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு ஏலம், கறுவா, சாதிக்காய், கராம்பு தூள்களையும், தேன், பிரண்டி அல்லது வைனைக் கலந்து காயாமல் இறுக மூடி 3-4 நாட்கள் ஊறவிடவும்.

பின்பு ரவையை சிறிது நேரம் வறுக்கவும். ரவை எல்லாவற்றிலும் சூடு சமமாக பரவும்வரை வறுக்கவும். கருக வறுக்கக் கூடாது.

மாஜரீனையும் சீனியையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கிறீமாகவரும்வரை அடிக்கவும்.

பின்பு அதனுள் ரின்பாலைச் சேர்த்து அடிக்கவும். பின்பு இதனுடன் ஊறவிட்ட பழங்களுடன் ஸ்ரோபெரி ஜாமைக் கலந்து
சேர்த்துக் கலக்கவும். பின்பு இதனுள் பேக்கிங் பவுடர் கலந்த மா ஆறவிட்ட ரவை இவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

இந்த கலவையை மாஜரீன் பூசி, சிறிது மா தூவிய தட்டில் இட்டுப் பரவி 160*C பாகை சதமத்தில் 90 நிமிடம் 1 1/2 மணித்தியாலத்திற்கு பேக் பண்ணி எடுக்கவும்.

ஆமண்ட் அல்லது கஜூ பேசட் - Almond or Cashew paste - Marzipan செய்முறை:

ஆமண்ட் அல்லது கஜூ தூளுடன் சீனி, ஐசிங் சீனி, எலுமிச்சைச் சாறு, 1/2 தேகரண்டி ஆமண்ட் எசன்ஸ் என்பவற்றைச் சேர்த்துக் கலந்து குளூக்கோஸ் சிரப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலந்து குழைத்து அல்லது ( 1-2 முட்டை மஞ்சள் கருவைக் சேர்த்துக் கலந்து) பசையாக உருட்டி எடுத்து ஐசிங் சீனி தூவிய தளத்தில் வைத்து நன்றாக மெதுமையானதாக வரும்வரை கைகளினால் அழுத்திப் பிசைந்து மெல்லியதாக உருளையினால் உருட்டி கேக்கின் மேல்பரவி விரித்து மூடவும்.

குறிப்பு : 

இங்கு தந்துள்ள ஐசிங் அளவு நான் செய்துள்ள கேக்கை மூடுவதற்குரிய அளவு அல்ல. ஒவ்வொருவரும் உங்களுக்கு தேவையான அளவில் ஐசிங்கை செய்து எடுக்கவும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.