சர்ச்சைக்குரிய அமெரிக்க விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம்!!

சநர்ச்சைக்குரிய அமெரிக்காவின் Western Global Airlines நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பா துகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் விமான நிறுவனமாக இந்த விமான நிறுவனம் பெயரிப்பட்டுள்ளது.

பெல்ஜியம் லீஜ் நகரிலிருந்து கடந்த 28 ஆம் திகதி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது. Western Global அமெரிக்க விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக முன்னிற்கும் இருவரில் ஒருவர் அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான CIA அமைப்பில் பணியாற்றிய முக்கியஸ்தராவார்.

இந்த விமானம் எதற்காக வந்துள்ளது? விமானத்தில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் என்ன? இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக நாட்டின் பல நிறுவனங்களை தொடர்புகொண்டு வினவியபோதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் Western Global நிறுவனத்தின் விமானங்கள் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பங்களில் இலங்கையில் சேவை வழங்குநர்களின் தேவைகளுக்காகவே வந்ததாக குறிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும், இந்த நிறுவனம் அமெரிக்காவின் பொருட்கள் விநியோக சேவைக்காக அனுமதி பெற்றுள்ள ஒரு சிவில் விமான சேவையாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.