எங்கள் விடுதலைக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – முருகன்,நளினி கோரிக்கை!

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறித்த தகவலை வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த புகழேந்தி, தங்களை விடுதலை செய்யக்கோரி நளினியும் முருகனும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக முருகன் உடல் சோர்வுடன் இருக்கிறார். நேற்று முன்தினம் மாலை அவர் மயக்கமடைந்துள்ளார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் இருவருமே தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் தனிமை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.

முதல்வர் தலையிட்டு தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருவரும் விரும்புகின்றனர். முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டால் தானும் உண்ணாவிரதத்தை கைவிடும் முடிவில் இருப்பதாக நளினி தெரிவித்தார்” எனக் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டாத்தை முன்னெடுத்துள்ளனர்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் முருகன் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருப்பதற்கான எந்த மனுவையும் அவர் அளிக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.  அதேபோல், பெண்கள் சிறையில் உள்ள நளினி நேற்றுடன் 8ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரின் உடல் நிலையையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.