தமிழில் உரையாடத் தடை – சர்ச்சைக்குரிய கருத்து குறித்து நிர்வாகம் விளக்கம்!!

கொழும்பிலுள்ள பிரபல உணவகமொன்றில் தமிழ் மொழியில் உரையாடத் தடை என அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக குறித்த உணவகத்தின் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.


இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனத்தினர் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான விளக்க கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் அறிவிப்பு பலகையில் காணப்பட்ட வாசகங்கள் தொடர்பாக மன்னிப்பு கோரப்பட்டுள்ளதுடன், நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றின் அறிவிப்பு பலகையில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும் என்றும் தமிழில் உரையாடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இவ்விவகாரம், இலங்கை அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது.

இதனையடுத்து அமைச்சரின் பணிப்புரையின்பேரில் அரச கரும மொழிகள் அமைச்சு, இந்நிறுவனத்திடம் இச்சம்பவம் தொடர்பாக கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த உணவகத்தின் நிர்வாகம் மன்னிப்பு கோரி பதில் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.