‘தர்பார்’ படத்தின் முக்கிய வெளியீடு குறித்த அறிவிப்பு!!

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகவுள்ளது.


இதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலான மோஷன் பொஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இயக்குநர் முருகதாஸ் தனது ருவிற்றர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

அதேபோல ஹிந்தி மொழி போஸ்டரை நடிகர் சல்மான் கானும், மலையாள திரையுலகத்துக்காக நடிகர் மோகன்லாலும் வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கடந்த மாதம் தனது ருவிற்றர் பக்கத்தில் “கமல் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் திகதி ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதில் ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.