கட்சிகளின் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம்!!

டிசெம்பர் 12 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்துக் கட்சியினரும் இன்று முதல் தமது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.


கொன்சர்வேற்றிவ் கட்சியினர் பிரெக்ஸிற்றை முன்னிறுத்தி தங்களது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகின்றனர்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை கொண்டிருக்காத காரணத்தினால் கொன்சர்வேற்றிவ் கட்சியினால் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்றமுடியவில்லை.

இதனால் தமது கட்சி பெரும்பான்மை பலத்தினைப் பெறுவதற்காக தமக்கு வாக்களுக்குமாறு அவர்கள் வாக்காளர்களிடம் கேட்கவுள்ளனர்.

தொழிற்கட்சியின் கீழ் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவோம் என ஜெரமி கோர்பின் உறுதியளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தெரேசா மே மற்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோரின் பிரெக்ஸிற் ஒப்பந்தங்களை எதிர்த்த தொழிற்கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுடன் பிரெக்ஸிற் குறித்து மீண்டும் மக்கள் வாக்கடுப்பு நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

தாம் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு £100 பில்லியன் நிதியை காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்காகச் செலவிடுவோம் என்று பசுமைக் கட்சி உறுதியளித்துள்ளது.

இந்தத் தேர்தலின் முக்கிய பிரச்சினையாக பிரெக்ஸிற் அமைந்துள்ள போதிலும் பசுமைக் கட்சி உட்பட சில கட்சிகள் மற்றைய பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்துகின்றன.

லிபரல் ஜனநாயகக் கட்சியினர் மனநலத்திற்காக ஆண்டுக்கு 2.2 பில்லியன் பவுண்ஸ்களைச் செலவிடுவதாக உறுதியளித்துள்ளனர்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பலத்தினைப் பெற்றால் பிரெக்ஸிற்றை முற்றிலுமாக ரத்துச் செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஜோ ஸ்வின்சன் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியின் (எஸ்.என்.பி) தலைவர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தனது கட்சியை ஆதரிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்கவேண்டும் என்று ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி கூறுகின்றது.

மேலும் ஸ்கொட்லாந்தில் ஒரு சுதந்திர வாக்கெடுப்பை நடத்தி ஐக்கிய ராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்பதும் அவர்களின் விருப்பமாகும்.

தீவிர பிரெக்ஸிற் ஆதரவுப் போக்குடைய பிரெக்ஸிற் கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளாமல் பிரித்தானியா விலகவேண்டும் என்று விரும்புகின்றது.

நீங்கள் ஒரு பிரெக்ஸிற் வாக்காளராக இருந்தால், இந்தத் தேர்தலில் நீங்கள் தொழிற்கட்சிக்கு வாக்களிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் உங்கள் வாக்கைக் காட்டிக் கொடுப்பார்கள் என்பது தெளிவாகிறது என்று பிரெக்ஸிற் கட்சித் தலைவர் நைஜல் பராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் பொரிஸ் ஜோன்சனை நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். ஆனால் அவர் முன்வைப்பது தெரேசா மேயின் 95% மான ஒப்பந்தம் அது பிரெக்ஸிற் அல்ல என்றும் பராஜ் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.