முக்கிய இராணுவ அதிகாரி கோத்தபாயவிற்காக வடக்கில்!!

சில காலத்தின் முன் கண்ணீர், மாலை மரியாதை, இனஐக்கியம் என சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பாண்டு, கோட்டாபய ராஜபக்சவிற்காக களமிறங்கியுள்ளார்.


செய்தியாளர்களை சந்தித்த ரத்னப்பிரிய இந்த தகவலை தெரிவித்தார்.

வடக்கிலுள்ள இளைஞர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கோட்டாவிற்காக வடக்கில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மாதத்தின் முன்னர் வடக்கை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று என்னை சந்திக்க வந்தது.

சேர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். அவரது வெற்றிக்கு நாம் என்ன செய்வது? என கேட்டனர்.

நீங்கள் ஏன் அந்த முடிவை எடுத்தீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டேன். “சேர்.. இந்த அரசாங்கத்திடம் பல விடயங்களை கேட்டோம்.

ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் தனிச்சட்டத்தையோ, தனி நாட்டையோ கேட்கவில்லை.

எங்களுடன் போரில் ஈடுபட்ட தெற்கிலுள்ள சிங்கள பௌத்தர்களிடம், எங்கள் வாழ்க்கையைப்பற்றித்தான் கேட்டோம்.

எங்கள் நாட்டை ஒப்பந்தம் செய்து விற்கத்தான் முயல்கிறார்கள். ஒப்பந்தங்களால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறதென்றால், நாமும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றனர் என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.