ஹொங் கொங்கில் தொடரும் போராட்டங்கள்!!
ஹொங் கொங்கில் பாதுகாப்புத் தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சத்தினால் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி மற்றுமொரு தினத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) சில பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஹொங் கொங் பிராந்தியத்தின் பல்வேறு ரயில் மார்க்கங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக அல்லது தாமதமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பயணிகளை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்துவதுடன், ரயில் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றனர்.
குற்றப்பின்னணி உடையோரை நாடுகடத்துவது குறித்து ஹொங் கொங்கில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டமூலம் தொடர்பில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனநாயக ஆதரவுப் போராட்டமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை