பசுமை இல்ல வாயுவை பயன்படுத்தி வோட்கா மதுபானம் தயாரிக்க முயற்சி!

அமெரிக்காவைச் சேர்ந்த Air Co நிறுவனம் ஒன்று பசுமையில்ல வாயுவான கார்பன்டையொக்சைடில் இருந்து வோட்கா தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளது.


பசுமை இல்ல வாயுக்களில் கார்பன்டையொக்சைட், மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஒக்சைடு ஆகியவை உள்ளடங்குகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகை, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, குளிர்சாதன பெட்டி மற்றும் காற்று சீராக்கிய பயன்பாடு, குப்பைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமை போன்ற காரணங்களினால் இந்த வாயுக்கள் வெளியாகின்றன.

குறித்த பசுமையில்ல வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து உயிரினங்கள் அழிவடையும். துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும் நிலை ஏற்படும்.

உலகின் பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றங்கள் குறித்தும் இயற்கையை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த மதுபானம் தயாரிக்கும் நிறுவனம், கரியமிலவாயுவைப் பயன்படுத்தி வோட்கா மதுபானத்தை தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்துள்ளது.

வோட்கா மதுபானம் பொதுவாக சோளம், உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை போன்ற தானியங்களில் இருந்து நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகின்றது.

இதனால் ஒரு பாட்டிலுக்கு 13 பவுண்டுகள் அளவிற்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. ஆனால், வழக்கமான நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, Air Co இயந்திரங்கள் சூரிய சக்தியில் இயங்கி, நீர் மற்றும் கரியமில வாயுவை எத்தனாலாக மாற்றுகின்றன.

தாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயல்பாடே தங்களது இந்த தயாரிப்புக்கு உத்வேகம் எனவும், பசுமை இல்ல வாயுக்களின் மூலம் மதுபானம் தயாரிக்கப்படும் இந்த செயல்முறை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நிச்சயம் ஒருநாள் உதவும் என அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது Air Co நிறுவனத்தின் வோட்கா தயாரிப்புக்கள் நியூயார்க் நகரின் சில உணவகங்களுக்கு ஒரு 750 மில்லிலீற்றர் 65 டொலர் விலையில் விற்பனை செய்யப்பட்ட வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.