ஒற்றுமையாய் தேர்தலைப் புறக்கணிப்போம்.!!📷

தமிழர்களின் வாழ்வுரிமையை மறுக்கும்
பேரினவாத வேட்பாளர்களை நிராகரிப்போம்
தமிழ் ம்ககள் மீது இனவழிப்பை அரங்கேற்றிவிட்டு என்ன திமிருடன் எங்களிடமே வந்து வாக்குக் கேட்கிறார் யுத்தக் குற்றவாளி கோட்டா
சமஸ்டித் தீர்வை தரமாட்டோம் என்றும்

வடக்கு கிழக்கை இணைக்க மாட்டோம் என்றும்
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மாட்டோம் என்றும்
சிங்கள மயமாக்கலை நிறுத்த மாட்டோம் என்றும்
பௌத்த கேந்திர நிலைய மாக இலங்கையை மாற்றுவோம் என்றும்
ஆயிரமாயிரம் புத்த விகாரைகள் அமைப்போம் என்றும் எக்தாளமாகக் கூறியவாறு எமது மக்களிடம் வருகிறார்கள்.


யுத்த குற்றவாளிகளை ஜெனீவாவரை சென்று சர்வதேச விசாரணையிலிருந்து பாதுகாத்தவர்கள் எம்மிடம் வாக்குக் கேட்டு வருகின்றார்கள்.


மேற்குலகின் செல்லப்பிள்ளை சரத்பொன்சேகா செய்த இனப்படுகொலையை மூடி மறைத்து அவரைத் தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப் போகிறவருககு வாக்களிக்குமாறு கோருகிறார்கள்
எமது கோரிக்கைகளை ஏற்பதற்கு இந்திய மேற்கலநாடுகளோ அன்றி அவர்கள் பதவிக்கு கொண்டுவர விரும்பும் வேட்பாளரோ ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லாத நிலையில் இத்தேர்தலை பகிஸ்கரிப்பதனைத் தவிர வேறு எந்தத் தெரிவும் எமது மக்களுக்கு இல்லை.
எமது கோரிக்கையை ஏற்று எமது மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படுமாயின் இந்திய மேற்குலக நாடுகளை எதிர்காலத்தில் எமது கோரிக்கைகளை ஏற்கும் நிலைக்கு கொண்டுவர முடியும்.

தென்னிலங்கையிம் இது வரைக்கும் இருக்கும் அரசியல் ஒழுங்கிலும் தலைகீழ் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த முடியும்.

அதாவது தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டோம் என்பதில் ஏட்டிக்குப் போட்டியாக எகத்தாளமிடும் நிலை மாறி கூடுதல் உரிமைகளை வழங்குவோம் என்று பகிரங்கமாகக் கூறி வாக்குப் பெறும் நிலையை உருவாக்க வேண்டும்.
 
அந்த நிலையை உருவாக்க முடியும்.
ஆகக் குறைந்தது 60 வீதமான மக்களேனும் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலை என்று ஆரம்பிக்கின்றதோ அன்றிலிருந்துதான் சர்வதேச சமூகமும் பௌத்த பேரினவாதமும் தமிழரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவார்கள்.
அந்த நிலையை உருவாக்க அனைவரும் ஒற்றுமையாய் தேர்தலைப் புறக்கணிப்போம்.

தேர்தலைப் புறக்கணிகக் வேண்டியதன் அவசியத்தை விளக்கும் துண்டுப் பிரசுர விநியோகம் மாங்குளம் 12-11-2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், வானம், மேகம் மற்றும் வெளிப்புறம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.