காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம்!!

வவு­னி­யாவில் 997ஆவது நாட்­க­ளைக் கடந்து போராட்டம் மேற்­கொண்டுவரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது.


அன்­றைய தினம் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நி­திகள், தமது போராட்­டத்தைப் பார்­வை­யி­ட­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருப்பதாகவும் சில சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­களும் தமது ஆயிரம் நாள் போராட்­டத்­துக்கு வருகை தர­வுள்­ளதாகவும் தமது போராட்­டத்துக்கு பொது மக்கள் ஆத­ர­வை வழங்­கு­மாறு கோரு­வ­தா­கவும் காணாமல்போனோரின் உறவினர்கள் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற போராட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­துள்­ளனர்.

ஒற்­றை­யாட்சி அர­சுக்குள் சமஷ்டி மறைந்­தி­ருப்­ப­தாக சம்­பந்தன் பொய் சொல்­லும்­போது தமிழ் புத்திஜீவிகள் மற்றும் பல்­கலைக்­க­ழகப் பேரா­சி­ரி­யர்கள் எங்கே?

கடந்த 10 ஆண்­டு­க­ளாக எங்­களை ஏமாற்­றிய பிறகு தமி­ழர்கள் ஏன் மீண்டும் மீண்டும் உங்கள் பேச்­சைக்­கேட்­க­ வேண்டும்? இனி சிங்­கள ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நாங்கள் ஆத­ரிக்க மாட்டோம். அர­சியல் கைதி­களை உடனே விடு­தலை செய். எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே? போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் ஐக்கிய நாடுகள் கொடியுடன் தமது போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.