முன்னாள் போராளி சிவதீபன் ஜேர்மன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்!

போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவரை ஜேர்மன் நீதிமன்றமொன்று விடுதலை செய்துள்ளது.


முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இராணுவத்தினரை சுட்டுக்கொன்று, தீமூட்டியதாக சிவதீபன் என்ற முன்னாள் போராளி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் ஜேர்மன் டயல்டோர்ஃப் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

கடந்த 2009 யுத்தம் முடிந்த சமயத்தில் சிவதீபன் ஜேர்மனிக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ஜேர்மனி பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்லையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு ஆதாரமில்லாததால் சிவதீபன் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.