இலங்கை சிறார்கள் தொடர்பில் ஐ.நாவின் அவசர வேண்டுகோள்!

இலங்கையில் 6 மில்லியன் சிறுவர்களைப் பாதிக்கும் 6 பிரதான விடயங்கள் மீது கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் நிறுவனம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.


இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நியாயமானதும் செழிப்பானதுமான எதிர்காலம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு இந்த தேர்தல் இலங்கைக்கு கிடைத்த அரியதொரு வாய்ப்பாகும்.

இதனை அடைவதற்கு இலங்கையின் 6 மில்லியன் சிறுவர்களில் எந்தவொரு சிறுவரும் புறந்தள்ளப்படாது இருப்பதை நாம் உறுதி செய்தல் வேண்டும்.

இலங்கையானது பல இலட்சக்கணக்கான குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது.

5 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் இறப்பு வீதம் வெகுவாக குறைந்துள்ளது. ஆரம்ப பாடசாலையில் ஆண் பிள்ளைகளினதும் பெண் பிள்ளைகளினதும் வருகை உலகளாவிய எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இருந்தபோதும் தமது திறனை வெளிப்படுத்துவதற்கு எமது உதவியை நாடி பல சிறுவர்கள் காத்திருக்கின்றனர்.

இலங்கையின் 6 மில்லியன் சிறுவர்கள் சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சக்தியும் பொறுப்பும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதிக்கு உள்ளது.

சிறுவர்களை பாதிக்கும் பிரதான 6 விடயங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுப்போம்.

இலங்கையின் எதிர்காலத்திற்காகவும் அதன் எதிர்கால சந்ததியினருக்காகவும் இன்றே செயற்படுவோம்.

இலங்கையிலுள்ள ஒவ்வொரு சிறுவருக்காகவும் நாம் கவனம் செலுத்த வேண்டிய 6 முக்கிய விடயங்களை யுனிசெஃப் இனங்கண்டுள்ளது.

1.சிறுவர்களின் மந்த போசாக்கை நிரந்தரமாக ஒழித்தல். சமூக அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சை ஆகியவற்றுக்கான முதலீடுகளை அதிகரித்து இலங்கை சிறுவர்களின் மந்த போசாக்கு பிரச்சினையை நிவர்த்தி செய்தல்.

2. இளவயதினரை எதிர்காலத்திற்காகத் தயார்படுத்தும் கல்வி முறை ஒன்றை உருவாக்குதல்.

3. சிறுவர்களின் வறுமை நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு சிறுவருக்கும் வாழ்க்கையில் வெற்றியீட்டுவதற்கு சமனான வாய்ப்பினை அளித்தல்.

4. சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்தல்.

5. அனைவரையும் உள்ளடக்கிய சமாதானமான இலங்கையைக் கட்டியெழுப்புதல்.

6. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடி, அதன் விளைவுகளுக்கு முகங்கொடுக்க இலங்கையை ஆயத்தம் செய்தல்.

உள்ளிட்ட அம்சங்களே அந்த வேண்டுகோளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.