விமான சேவைக் கட்டணங்களில் திருத்தம்!
வெளிநாட்டு விமானங்களுக்கான சேவைக் கட்டணங்களில் 38 வருடங்களுக்கு பின்னர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் அறவிடப்படும் கட்டணங்கள் 57 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணங்களின்படி நாளாந்த கொடுப்பனவுகள் 6 மில்லியன் ரூபாய் வரையில் அதிகரிக்கப்படலாம் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் நாளாந்தம் 125 விமானங்கள் பறப்பதாகவும் இதனூடாக தினசரி 3.9 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை