வாக்களிப்பு நிலையத்துக்குள் ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது!!


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குள் ஒளிப்படம் எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றிமை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வாக்களிப்பு நிலையத்துக்குள் சென்று வாக்களிப்பு, வாக்குப் பெட்டி மற்றும் அதிகாரிகள் ஆகியோரை படம் எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து வாக்களிப்பு நிலையத்தின் முதன்மை தலைமைதாங்கும் அதிகாரி, உடனடியாக தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.