சற்று பதற்ற நிலையில் கல்முனை!

கல்முனையில் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் இளைஞர்கள் குழப்பம் விளைவித்தமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்து சென்ற பின்னர் இரவு 7 மணியளவில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்போது இளைஞர்கள் கூச்சலிட்டமையினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சம்பவத்தோடு தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.