சாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல்!!
ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சாய்ந்தமருது மக்களின் வெற்றிக்கொண்டாட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது.
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை சாய்ந்தமருது மக்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி கொண்டாடினர். அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷவின் ஒளிப்படம் தாங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு மோட்டார் சைக்கிளிலும் பேரணியாக சென்றனர். இதன்போதே சில குழுவினரால் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இத்தாக்குதலை தடுக்க முற்பட்டவேளை குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை உருவாகியதுடன் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் குறித்த பிரச்சினை சுமூகமடைந்ததை அடுத்து வெற்றிக்கொண்டாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன், பிரதேச பொதுமக்கள் உள் வீதி எங்கிலும் பட்டாசு கொழுத்தி கொண்டாடியதோடு வீதியால் வந்த அனைத்து பிரயாணிகளுக்கும் இனிப்பு பண்டங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை