சிறுபான்மையினருக்கு அழைப்பு விடுத்த புதிய ஜனாதிபதியின் முதல் உரை!

இன்று இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.


அதனையடுத்து அவர் தனது முதலாவது உரையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது சிறுபான்மையினரை தன்னுடைய இந்த வெற்றியில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டபோதும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றும், எனினும் என்னுடன் இணைந்து செயற்படுங்கள் என ஜனாதிபதியாக அவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே தான் வெற்றிபெற்றதாக கூறிய அவர், சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் என்னால் வெற்றிபெற முடியும் என்பது எனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எனது வெற்றியில் பங்கெடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும், அத்துடன், சிவில் சமூகத்தினர் ஊடகத்துறையினருக்கும் நன்றிகள் எனக்கூறிய கோத்தபாய எனது தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு குறிப்பிட்ட படி இலங்கையைக் கட்டியெழுப்புவேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை எந்தவொரு அரச அலுவலகத்திலும் தனது ஒளிப்படத்தையோ அமைச்சர்களின் ஒளிப்படத்தையோ பொருத்த வேண்டாம் என்றும் தேசிய இலச்சினையை மட்டும் பொருத்துங்கள் எனவும் அதிரடியான கருத்தொன்றினையும் அவர் முன்வைத்துள்ளார்.

அத்துடன் அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என நாட்டின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இதன்போது உத்தவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.