அவுஸ்ரேலியாவில் புதர் தீ!!
அவுஸ்ரேலியாவில் கடந்த சில நாட்களாக பல ஏக்கர் நிலப்பரப்புகளை நாசமாக்கிய புதர் தீ சம்பவங்களுக்கு காரணமாக கருதப்படும் முக்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா செடிகளை பாதுகாப்பதற்காக புதர்களுக்கு தீவைத்து அது பெரும் காட்டுத்தீயாக மாறுவதற்கு காரணமானவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக புதர்த் தீ பற்றி எரிந்து வருகின்றது.
வனப்பகுதி மட்டுமன்றி புதர் மண்டிய பகுதிகளிலும் தீ பரவியுள்ளது. வறண்ட வானிலை காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதம் காரணமாக இதுவரை குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
10 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் 51 வயதான ஒருவர் தான் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்ததும், அதன் மூலமே காட்டுத்தீ பரவியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
தன்னிச்சையாக புதர் தீயை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை