விசேட பஸ் சேவைகள் இரண்டு நாட்களுக்கு!!
ஜனாதிபதித் தேர்தலுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்தகவலை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதற்காக 5800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம், 12 பகுதிகளிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பயணிப்பதற்கு ஏற்ற வகையில் பஸ் சேவைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகளின் வசதி கருதி மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாளாந்தம் பயணிக்கும் அனைத்து ரயில்களும் அட்டவணைக்கேற்ப பயணிப்பதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான தேவை இல்லை எனவும் ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை