வைகோ- ராமதாஸ்- சீமானை மிக மோசமாக விமர்சித்த நாமல்!!
வைகோ, ராமதாஸ், சீமான் போன்றவர்கள் இலங்கையில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஈழத்தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள் என நாமல்ராஜகக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் தேவையில்லாமல் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என்றும் நாமல் ராஜபக்சே விமர்சித்துள்ளார்.
நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்ரமைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொத்தபாய ஜனாதிபதியா வந்தால் அது தமிழக மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் வைகோ, அன்புமணி, மு.க ஸ்டாலின், சீமான், ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் இந்த கருத்து தொடர்பில் நமல் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள் என்றும் சாடிய நாமல் ,சந்தர்ப்ப ரீதியாக அவர்கள் ஈழத்தமிழர் அரசியலை கையில் எடுத்து தங்களுக்கு தேர்தலில் வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சுயநலமாக அரசியல் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். இவர்கள் அரசியலை தவிர தங்கள் மக்களுக்கு வேறு எதுவும் செய்தது கிடையாது எனக்கூரிய நாமல், ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் கெடுதல்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்று இவர்கள் நல்ல விஷயம் எதுவும் செய்தது கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியை விமர்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையில் செயல்படுங்கள் எனவும் தேவையில்லாமல் முதலைக்கண்ணீர் வடிக்கவேண்டாம் எனவும் நாமல் ராஜபக்க்ஷ காட்டமாக தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை