குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் அறிமுகம்!
புதுச்சேரியில் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படாமல், நகராட்சிகளால் இதுவரை பெறப்பட்டு வந்தது. இதனால், குப்பைகளை மறு சுழற்சி செய்வதில் பெரும் சிக்கல்
எழுந்துள்ளது.புதுச்சேரி, உழவர்கரை, அரியாங்குப்பம், வில்லியனுார் நகரப் பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் முறை, நவம்பர் 1ம் தேதியான இன்று முதல் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மக்கும் குப்பைகளை தனியாகவும், மக்காத குப்பைகளை தனியாகவும் துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.டாயப்பர், சானிட்டரி நாப்கின் போன்ற அபாயகரமான வீட்டுக் கழிவுகளை தனியாக ஒரு காகிதத்தில் கட்டி, சிகப்பு பேனா மையால் குறியிட்டு, துப்புரவு பணியாளர்களிடம் அளிக்க வேண்டும்.இயக்குனர் வேண்டுகோள்இதுகுறித்து, உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர்கண்ணன் கூறும்போது, 'திடக்கழிவு மேலாண்மை விதிகள்- 2016ன்படி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தருவது சட்டமாக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரும் குப்பைகளை தெருவில் வீசுவதோ, எரிப்பதோ அல்லது புதைப்பதோ திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படியும் குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து, வீடு வீடாக வருகின்ற ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.எனவே, புதுச்சேரி, உழவர்கரை, அரியாங்குப்பம், வில்லியனுார் நகர எல்லைக்குட்பட்ட பொதுமக்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, தனித்தனி பைகளில் போட்டு, துப்புரவு பணியாளர்களிடம் இன்று முதல் அளிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தை துாய்மையான நகரமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.மக்கும் குப்பை எது?காய்கறிகள், பழங்கள் மற்றும் காய்களின் கழிவுகள், தலைமுடி, அட்டைகள், தாள்கள், சைவ மற்றும் அசைவ உணவுக் கழிவுகள், பூக்கள், மரங்கள் போன்றவை மக்கும் குப்பைகளாகும்.மக்காத குப்பை எது?அனைத்து விதமான பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்கள், கண்ணாடி பொருட்கள், தகரங்கள், இரும்பு பொருட்கள், மிட்டாய்களின் உறைகள், தண்ணீர் பாட்டில்கள், டின், கேன், ரப்பர் பொருட்கள், டயர்கள் போன்றவை, இயற்கை சுழற்சி மூலம் மக்க வைக்க முடியாத குப்பைகளாகும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை