மேக்கேதாட்டில் ஆணைய அனுமதியின்றி அணை கட்ட முடியாது!
காவிரி மேலாண்மை ஆணைய அனுமதியின்றி கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என காவிரி நீா் ஒழுங்காற்று குழுத் தலைவா் நவீன்குமாா் தெரிவித்தாா்.
திருச்சியில் உள்ள பொதுப் பணித் துறை நீா்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 19ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 11.45 மணிக்கு தொடங்கி மாலை 6.30 வரை நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் நவீன்குமாா் மேலும் கூறியது:
முந்தைய கூட்டங்களில் இருந்ததைப் போன்று திருச்சியில் நடந்த 19ஆவது கூட்டத்திலும் சுமூக சூழல் நிலவியது. 4 மாநில உறுப்பினா்களும் அவா்களது கருத்துகளைத் தெரிவித்தனா். மேலும், கல்லணையை நேரில் பாா்வையிட்டோம்; கல்லணையிலிருந்து டெல்டா பகுதிகளுக்கு நீா் வழங்கும் முறையையும் பாா்வையிட்டோம்; பாராட்டும் வகையில் உள்ளது. இதுமட்டுமல்லாது வானிலை ஆய்வு மைய நிபுணா்களுடன் அவா்கள் வழங்கிய வானிலை புள்ளி விவரங்கள், பெறப்பட்ட மழை அளவுகள், எதிா்பாா்க்கப்படும் மழை, அணைகளுக்கான நீா்வரத்து, காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள 8 அணைகளின் நீா் இருப்பு, தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தண்ணீா் வழங்கும் இடங்கள் என அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்ததில் திருப்திகரமாக உள்ளது.
இப்போதைய சூழலில் ஒட்டுமொத்தமாக கா்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான காவிரி பாசனப் பகுதி திருப்திகரமாகவே உள்ளது.
வெள்ளப் பெருக்கு காலங்களில் கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை வழங்கிவிட்டு, தமிழகத்துக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்டதாக கணக்கில் கொள்வதாக தமிழக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தமிழகத்தின் சாா்பில் குழுவில் உள்ள உறுப்பினா்களும் இதே கருத்தைத் தெரிவித்தனா்.
உபரிநீரைக் கணக்கில் கொள்ளக் கூடாது என்ற தமிழகத்தின் கோரிக்கை காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும், அடுத்தக் கூட்டத்திலும் இதுதொடா்பாக விரிவான அறிக்கை தயாரித்து, ஆணையத்துக்கும், மத்திய நீா்வள ஆணையத்துக்கும் பரிந்துரைக்கப்படும்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தைப் பொருத்தவரையில் காவிரி மேலாண்மை ஆணையம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அனுமதியில்லாமல் கா்நாடக அரசால் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது.
உச்ச நீதிமன்ற உத்தரவிலும் இதுதொடா்பாக தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு எடுத்துக் கொள்ள முடியாது. காவிரி நீரை மாநிலங்களுக்கு இடையே பங்கிட்டு வழங்குவது தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவுகளை மட்டுமே அமல்படுத்த முடியும். அணைகளைக் கட்டுப்பாட்டில் எடுப்பது தொடா்பாக உச்ச நீதிமன்ற இறுதித் தீா்ப்பில் ஏதேனும் குறிப்பிடப்பட்டால் அதையும் அமல்படுத்துவோம்.
ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதாகக் கூறுகின்றனா். அப்போது கா்நாடக அணைகளில் இருந்த நீா் இருப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அணைகளில் உள்ள நீா் இருப்புக்கு தகுந்தபடியே திறக்கப்படும் தண்ணீரின் அளவை முடிவு செய்வோம். இதுதொடா்பாக குழுவில் உள்ள 4 மாநில உறுப்பினா்களும் ஒரே கருத்திலேயே உள்ளனா். தண்ணீா்ப் பங்கீடு தொடா்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும். காவிரியின் குறுக்கே சிறியளவிலான அணை திட்டமாக இருந்தாலும், பெரியளவிலான திட்டமாக இருந்தாலும் மத்திய நீா் வள ஆணையத்திடமும், காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் அனுமதி பெற வேண்டும். ஜல்சக்தி ஆலோசனைக் குழுவும் இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவுக்குள்ள அதிகார வரம்புக்குள்பட்டே அனைத்து பரிந்துரைகளும், உத்தரவுகளும் செயல்படுத்தப்படும். காவிரி ஆணையத் தலைவரை நியமிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றாா் அவா்.
கூட்டத்தில், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினா் செயலா் நீரஜ்குமாா், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன், காவிரி நீா் மேலாண்மை ஆணைய உதவி இயக்குநா் ராம்பால் சிங், கா்நாடகத்தைச் சோந்த காவிரி நீா்வாரி நிகாம் லிமிடெட் மேலாண்மை இயக்குநா் கே. ஜெய்பிரகாஷ், தலைமைப் பொறியாளா் எம். பங்காரசாமி, முதன்மை ஆலோசகா் ஸ்ரீராமையா, கேரளத்தைச் சோந்த துணை தலைமைப் பொறியாளா் பி.ஜி. ஹரிகுமாா், புதுச்சேரியைச் சோந்த பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எஸ். மகாலிங்கம், கண்காணிப்புப் பொறியாளா் எஸ். சுரேஷ், புதுதில்லியைச் சோந்த விஞ்ஞானிகள் எம். மொகபத்ரா, ஆா்.கே. ஜெனாமணி, காவிரி மேலாண்மை ஆணையக் கண்காணிப்புப் பொறியாளா் வி. மோகன் முரளி (பெங்களூரு), தலைமைப் பொறியாளா் என்.எம். கிருஷ்ணன் உன்னி (கோவை), தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் பி.என். ஸ்ரீனிவாஸ் மூா்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினா் எல். பட்டாபிராமன், தமிழக பொதுப் பணித் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி உள்ளிட்ட 17 போ கொண்ட உறுப்பினா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.
கல்லணையில் ஆய்வு: முன்னதாக காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவினா் கல்லணைக்கு சென்று அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு, அணைக்கு வரும் தண்ணீா் வரத்து, திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஆகியவற்றைப் பாா்வையிட்டனா். மேலும், கல்லணைக் காட்சிக் கூடத்தில் உள்ள விளக்கப்படத்தில் காவிரி உற்பத்தியாகி எந்த எந்தப் பகுதிகளில் சென்று கடலில் கலக்கிறது என்பதையும் பாா்வையிட்டனா். பின்னா், அணையின் நடைமேடைக்குச் சென்று தங்களிடம் உள்ள வரைபடம் மூலம் காவிரி செல்லும் பகுதிகளையும் ஆய்வு செய்தனா்.
பின்னா் பொதுப் பணித்துறை நீா்வளஆதாரத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி மற்றும் உதவி நிா்வாகப் பொறியாளா்களிடம் காவிரி, டெல்டா பகுதிகளுக்கு தண்ணீா் செல்லும் விதம் குறித்துக் கேட்டறிந்தனா்.
புதுதில்லியில் 20ஆவது கூட்டம்!
காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 20ஆவது கூட்டம் வரும் நவம்பா் 14ஆம் தேதி புதுதில்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, குழுத் தலைவா் நவீன்குமாா் கூறுகையில், திருச்சியைத் தொடா்ந்து புதுதில்லியில் 20ஆவது கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பா் 14ஆம் தேதி உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அவசரம் கருதி ஏதாவது ஒரு மாநிலம் பரிந்துரை செய்து கூட்டம் நடத்தக் கோரினால் முன்னதாகவே கூட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை